HomeTop newsபாடசாலை மாணவர்களுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ரூ.10,000 வாய்ப்பு

பாடசாலை மாணவர்களுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ரூ.10,000 வாய்ப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட 13ஆம் தர மாணவர்களுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் நிறைவேற்று உப தலைவர் நிரோஷன் விஜேசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக ரூ.500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பங்குச் சந்தை தொடர்பான பாடநெறியைப் பூர்த்தி செய்து பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு தலா ரூ.10,000 முதலீட்டு வாய்ப்பு வழங்கப்படும்.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்கள் அனைவருக்கும் இத்திட்டத்தின் மூலம் வாய்ப்பளிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular