HomeTop newsஅத்தியாவசிய உணவுப் பொருட்களின் வரி குறைப்பு இன்று முதல் அமுல்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வரி குறைப்பு இன்று முதல் அமுல்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான விசேட வர்த்தகப் பண்ட வரியை அரசாங்கம் குறைத்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் கருவாட்டுக்கான வரி கிலோகிராமுக்கு 100 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகவும், மாசி மீனுக்கான வரி 302 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், மிளகாய்த் தூள் மற்றும் உலர்ந்த மிளகாய்க்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த வரிக் குறைப்பு இன்று (13) முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன், இதன் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular