Homeவணிகம்இலங்கை செயற்கை நுண்ணறிவு கண்காட்சி மற்றும் மாநாடு 2026

இலங்கை செயற்கை நுண்ணறிவு கண்காட்சி மற்றும் மாநாடு 2026

இலங்கை செயற்கை நுண்ணறிவு கண்காட்சி மற்றும் மாநாடு 2026, கொழும்பு மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நேற்று (29) ஆரம்பமானது.

“செயற்கை நுண்ணறிவு பெருக்கப்பட்டது” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த இரண்டு நாள் நிகழ்வு, தொழில்நுட்பத் துறைத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் புதுமையாளர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் SLT-MOBITEL நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு, இலங்கை செயற்கை நுண்ணறிவு வாரம் 2026 இன் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.

கண்காட்சிப் பகுதியில் 35-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துகின்றன.

இந்தக் கண்காட்சி பொதுமக்களுக்கு இலவசமாகத் திறக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் 16 நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்துகொள்கின்றனர். கூகுள், அலிபாபா, ஹுவாவே, ZTE மற்றும் டெலாய்ட் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கின்றனர்.

நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு தொடர்பான கொள்கைகள் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மாநாட்டில் கலந்துரையாடப்படுகின்றன.

மாநாட்டின் முக்கிய அமர்வுகளுக்கான நுழைவுச்சீட்டுகள் நிகழ்வு ஆரம்பிக்கும் முன்னரே முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இலங்கையின் உள்ளூர் புதுமையாளர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் தேசிய செயற்கை நுண்ணறிவு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு, தேசிய செயற்கை நுண்ணறிவு விருதுகள் வழங்கும் நிகழ்வுடன் நாளை (30) நிறைவடையவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular