கேகாலை, மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 7 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சாரதி பயிற்சிப் பாடசாலைக்குச் சொந்தமான பல வாகனங்களே இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
