HomeTop newsபிரசவத்திற்குப் பிறகு வீராங்கனைகள் மீண்டும் விளையாட திரும்புவதற்கான புதிய வழிகாட்டுதல்கள்

பிரசவத்திற்குப் பிறகு வீராங்கனைகள் மீண்டும் விளையாட திரும்புவதற்கான புதிய வழிகாட்டுதல்கள்

பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் பிரசவத்திற்குப் பிறகு பாதுகாப்பாகவும், திட்டமிட்ட முறையிலும் மீண்டும் விளையாட்டிற்குத் திரும்புவதற்கான புதிய வழிகாட்டுதல்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிமுகப்படுத்தியுள்ளது.

மகளிர் கிரிக்கெட் தொழில்முறை ரீதியாக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், குடும்ப வாழ்க்கையையும் விளையாட்டு வாழ்க்கையையும் சமநிலைப்படுத்தும் வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீராங்கனைகளின் உடல் மற்றும் உளநலனை முன்னிறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள், கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகான மீட்பு காலம், மருத்துவ மதிப்பீடு, உடற்தகுதி மீளுருவாக்கம், பயிற்சிக்கு மீண்டும் திரும்புதல் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளன.

இதற்காக ஆறு கட்ட செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீராங்கனைகள் பாதுகாப்பாக உயர்மட்ட கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்புவதற்கான நடைமுறை வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், குழந்தை பராமரிப்பு வசதிகள், நெகிழ்வான பயிற்சி சூழல், பயண உதவிகள் மற்றும் குடும்ப ஆதரவு போன்ற அம்சங்களும் இதில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டுதல்கள், ஒரு பெண் வீராங்கனை தாய்மைக்கும் தனது விளையாட்டு வாழ்க்கைக்கும் இடையில் தேர்வு செய்ய வேண்டிய நிலையைத் தவிர்க்க உதவும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

மகளிர் கிரிக்கெட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும், வீராங்கனைகளின் நலனையும் பாதுகாப்பதற்கும் இந்த முயற்சி முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular