HomeTop newsஇறக்குமதி வாகனங்களுக்கு 50% மேலதிக வரி மீண்டும் அமுல்

இறக்குமதி வாகனங்களுக்கு 50% மேலதிக வரி மீண்டும் அமுல்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதித் தீர்வை வரியின் மீது 50% மேலதிக வரி (Surcharge) விதிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று (16) முதல் மூன்று மாத காலத்திற்கு இந்த 50% மேலதிக வரி அமல்படுத்தப்படவுள்ளது.

எனினும், மே 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் (Letter of Credit) திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த புதிய மேலதிக வரி பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த 50% மேலதிக வரியை கடந்த ஏப்ரல் 01ஆம் திகதி முதல் நீக்குவதற்கு நிதி அமைச்சு முன்னதாக தீர்மானித்திருந்தது. இருப்பினும், தற்போது அதனை மீண்டும் இன்று முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular