சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (16) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,033.33 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, வெள்ளியின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தை விலை குறைந்துள்ளதன் தாக்கம் காரணமாக இலங்கையிலும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
