HomeTop newsஉயர்தர மாணவர்களுக்கான ‘நிபுண சவிய’ நிதி உதவி

உயர்தர மாணவர்களுக்கான ‘நிபுண சவிய’ நிதி உதவி

2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான ‘நிபுண சவிய’ நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பங்களைக் கோருவதற்கான காலஅவகாசம் எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி முடிவடைவதாக ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை அறிவித்துள்ளது.

குறித்த நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய மாணவர்கள் தமது விண்ணப்பங்களை இணையவழியில் மாத்திரம் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் www.etfb.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிடமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தொழில் மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட, தேசிய தொழில் தகைமை (NVQ) மட்டம் 3, 4 மற்றும் 5 ஆகியவற்றின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 100 தெரிவுசெய்யப்பட்ட பாடநெறிகளில் ஒன்றைத் தொடர்வதற்கு, அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular