Homeஉலகம்போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி : இஸ்ரேல் -அமீரக ரகசியச் சந்திப்பு ஈரானை ஆத்திரமூட்டுமா?

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி : இஸ்ரேல் -அமீரக ரகசியச் சந்திப்பு ஈரானை ஆத்திரமூட்டுமா?

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நெதன்யாகுவை சந்தித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ம் திகதி போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

அதன்பின் கடந்த ஏப்ரல் 8ம் திகதி அமெரிக்கா – ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே அமைதி பேச்சுவார்த்தையில் இரு நாடுகள் இடையே இழுபறி நீடித்து வருகிறது.

இந்தநிலையில், ஈரானுடனான போரின் போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருடன் ரகசிய சந்திப்பை நடத்தினார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

‘சிங்கத்தின் கர்ஜனை’ நடவடிக்கையின் போது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசிய பயணம் மேற்கொண்டார். அங்கு அவர், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார் என்று அவரது அலுவலகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது.

ஈரானுடனான போரின்போது, இஸ்ரேல் தனது அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அவற்றை இயக்குவதற்கான பணியாளர்களையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பியதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ அறிவித்த ஒரு நாள் கழித்து, இந்த அறிவிப்பு வெளியானது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசியம் பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியானநிலையில், இதற்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. நெதன்யாகு எங்கள் நாட்டிற்கு வரவில்லை என ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular