முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் இன்று (12) முற்பகல் 11.50 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
2013ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, அவர் இன்று காலை 9.30 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
