Homeஉள்நாடுவாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வாகனங்களுக்கான வீதித் தகுதி மற்றும் பாதுகாப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்துவது தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்களும் பகுப்பாய்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் சான்றிதழை அறிமுகப்படுத்தும் போது, குறிப்பாகப் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வேலைத்திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக வீதித் தகுதி மூலோபாயக் குழுவின் மூலம் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, சான்றிதழை நடைமுறைப்படுத்தத் தொடங்கும் திகதி, அது கட்டாயமாக்கப்படும் வாகன வகைகள், வாகனங்கள் இயக்கப்பட்ட கிலோமீட்டர் அளவு அல்லது பிற அளவுகோல்கள், சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறைகள் மற்றும் அதற்குரிய சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

எனவே, இது தொடர்பான இறுதி முடிவுகள் மற்றும் உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும் வரை, சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் திகதி அல்லது அதற்குரிய நிபந்தனைகள் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதன் மூலம் பொதுமக்கள் தேவையின்றி அச்சமடையக்கூடும் என்றும், தவறான புரிதல்களும் அசௌகரியங்களும் ஏற்படக்கூடும் என்றும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டுமே அவதானிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular