மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்தும் பெய்துவரும் மழை காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்புப் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் (23) பெய்த மழை காரணமாக ஒரு வான் கதவு இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்கத்திற்கு கீழ் கொத்மலை ஓயாவின் இரு மருங்கில் வசிக்கும் மக்களையும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்புப் பொறியியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
