HomeTop newsவிகாரமஹாதேவி பூங்காவில் தேரர்கள் முன்னெடுத்த சத்தியாக்கிரகம் முடிவுக்கு

விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்கள் முன்னெடுத்த சத்தியாக்கிரகம் முடிவுக்கு

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

உலப்பனை சுமங்கல தேரர் இன்று (25) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வழங்கிய எழுத்துமூல ஆலோசனையின் அடிப்படையில் இந்த சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரரின் விடுதலை தொடர்பான விவகாரத்திலும் மகாநாயக்க தேரர்கள் தலையீடு செய்வதாக வழங்கிய உறுதியின் அடிப்படையில், தாம் முன்னெடுத்து வரும் இந்த சத்தியாக்கிரகத்தை நிறைவுக்கு கொண்டு வருவதாக உலப்பனை சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular