முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
2013ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு ஆணைக்குழு அறிவித்திருந்தது. அதன்பேரிலேயே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன அவர்களையும் விசாரணைக்காக ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
