யுக்ரைன் நாட்டின் முப்படைத் தளபதியாக பணியாற்றிய ஒலெக்சாந்தர் சிர்ஸ்கியை ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளார்.
அவருக்குப் பதிலாக புதிய இராணுவத் தளபதியாக மைகெய்லோ த்ரபதியி (Mykhailo Drapatyi) நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் பெடோரோவ் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, யுக்ரைன் தலைநகர் கீவ் நகரில் கடந்த ஆறு நாட்களாகத் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனையடுத்தே இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ரஷ்யாவின் படையெடுப்புக்கு மத்தியில், இராணுவத் தலைமைக்கு இடையேயான மோதல்கள் மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் யுக்ரைன்-ரஷ்யா போரில் பொதுமக்களின் உயிரிழப்புகள் இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளன. 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 1,396 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
