ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம் மற்றும் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (04) அறிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட வேண்டுமென கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
