Homeசெய்திபிரதேச செயலகத்தை நோர்வூட்டுக்கு மாற்றுக: பொகவந்தலாவயில் நாளை கை எழுத்து இயக்கம் !

பிரதேச செயலகத்தை நோர்வூட்டுக்கு மாற்றுக: பொகவந்தலாவயில் நாளை கை எழுத்து இயக்கம் !

நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக் கோரும் கை எழுத்து இயக்கம் நாளை (25) பொகவந்தலாவ பகுதியில் இடம்பெறவுள்ளது.

மலையக அரசியல் அரங்கம் முன்னெடுக்கும் இந்தத் தொடர் கை எழுத்துக்குத் தமது ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் சிவில் சமூக அமைப்புகளும் நாளை கை எழுத்து இயக்கத்தில் இணைய உள்ளன.

நோர்வூட் பிரதேச செயலகம் நோரவூட் நிவ்வெளிகம பகுதியிலிருந்து தித்வா புயலனர்த்த நாளில் இரவோடு இரவாக ஹட்டன் நகருக்கு அபகரித்துச் செல்லப்பட்டது.
இந்த அபகரிப்புக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் அதே நேரம் ஹட்டன் நகரில் புதிய பிரதேச செயலகம் ஒன்றை அமைக்கக் கோரியும் மலையக அரசியல் அரங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

எனவே நோர்வூட் நகரை அண்மித்ததான பகுதியில் நோர்வூட் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும் எனும் கோரிக்ககையை ஆதரிக்கும் யாவரும் நாளை 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரை பொகவந்தலாவை நகரில் மக்கள் மனுவில் கை எழுத்து இட முடியும் எனவும் மலையக அரசியல் அரங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular