Homeசெய்திசீரற்ற காலநிலை: நுவரெலியா உட்பட 4 மாவட்டங்களில் 147 குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலை: நுவரெலியா உட்பட 4 மாவட்டங்களில் 147 குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நுவரெலியா உட்பட நான்கு மாவட்டங்களில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (24) பகல் வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் குடும்பமொன்றும், கம்பஹா மாவட்டத்தில் 59 குடும்பங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 94 குடும்பங்களும் மரம் முறிவு, அதிக மழை மற்றும் வெள்ள நீர் உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 21 வீடுகள் உட்பட மொத்தம் 68 வீடுகள் பகுதியளவு தேசமடைந்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular