Homeஉலகம்ஈரான்மீது பாரிய ராணுவத் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான்மீது பாரிய ராணுவத் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானுடனான ஒப்பந்தம் முழுமையாக பின்பற்றப்படும்வரை அமெரிக்கப் படைகள் அப்பகுதியிலேயே நிலைநிறுத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையை மீறினால் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, ஈரான் அணு ஆயுதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது அமெரிக்க ராணுவம் தங்களைத் தயார்படுத்தி வருவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராக இருப்பதாகவும்டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ராணுவ வலிமையை நிலைநிறுத்துவதன் மூலம் ஈரானைக் கட்டுப்படுத்தும் டிரம்பின் கடுமையான நிலைப்பாட்டை இந்தப் பதிவு வெளிப்படுத்துகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular