நேபாளத்தின் கிழக்குப் பகுதியில், சீன எல்லைக்கு அருகிலுள்ள கோஷி மாகாணத்தில் இன்று காலை 7.17 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தப்லேஜங் மாவட்டத்தின் ஒலாங்சுங் கோலா பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் நேபாளத்தின் பல மாவட்டங்களிலும், தலைநகர் காத்மாண்டுவிலும் உணரப்பட்டுள்ளன.
மேலும், இந்தியாவின் டார்ஜிலிங், ஜல்பைகுரி உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனினும், உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
