Homeசினிமா‘ஜெயிலர் 3’ கதையை மிஞ்சும் ரசிகர்களின் கற்பனை

‘ஜெயிலர் 3’ கதையை மிஞ்சும் ரசிகர்களின் கற்பனை

தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகப் படங்களிலேயே மிகப் பெரும் வெற்றியாக “ஜெயிலர் 2″ படம் அமைய உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இந்த 2026ம் ஆண்டில் இதுவரையில் வெளியான இரண்டாம் பாகப் படங்களில் “கட்டா குஸ்தி 2, மீசைய முறுக்கு 2” ஆகிய படங்கள் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிகரமான படங்களாக அமைந்தன. அப்படங்களை விடவும் “ஜெயிலர் 2” பத்து மடங்கு வசூலைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.

“ஜெயிலர் 2” படத்தின் முடிவில் எதிர்பாராத சில டுவிஸ்ட்டுகளை வைத்துள்ளார் படத்தின் இயக்குனர். விஜய் சேதுபதியின் என்ட்ரி, வில்லி காந்தாவின் மெசேஜ் என “ஜெயிலர் 3” படத்திற்கான “லீட்” வைக்கப்பட்டுள்ளது என்பது படம் பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அந்த “லீட்”-ஐ வைத்து “ஜெயிலர் 3″க்கான கதை என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல கதைகளை எழுதி வருகிறார்கள். ஒரு சிலர் ஒரு படி மேலே போய் அதை ரீல்ஸ் வீடியோக்களாகவே எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

சிறப்புத் தோற்றத்தில் தென்னிந்திய நடிகர்கள், பாலிவுட் நடிகர்கள் என “ஜெயிலர்” படத்தின் இரண்டு பாகங்களிலும் இருந்தது போன்று “ஜெயிலர் 3” படத்தில் அர்னால்ட், ஜாக்கி சான் என உலக நடிகர்களையும் சேர்த்து வீடியோக்களை உருவாக்கி உள்ளார்கள்.

“ஜெயிலர் 3”–க்கான கதையை இயக்குனர் நெல்சன் யோசித்து எழுதுவதற்குள்ளாக இன்னும் இப்படி எத்தனை கதைகள் வரப் போகிறதோ ?.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular