HomeTop newsநுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது.

கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை (Unbalance) காரணமாக கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது.

அதேபோல், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டமையால் நேற்றும் நேற்று முன்தினமும் நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்சார துண்டிப்பு அமுலப்படுத்தப்பட்டது.

இது இன்றைய தினமும் (21) அதே போன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இருப்பினும், நாளை (22) முதல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடிவதனால் மின்வெட்டுக்கான தேவை இருக்காது என தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular