Homeஉலகம்ஈரானுக்கு எதிராக ‘Mother of All Bombs’ குண்டைப் பயன்படுத்த அமெரிக்கா பரிசீலனை

ஈரானுக்கு எதிராக ‘Mother of All Bombs’ குண்டைப் பயன்படுத்த அமெரிக்கா பரிசீலனை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிக்க உத்தரவிட்டால், அந்நாட்டின் வலுசக்தி உட்கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து, அமெரிக்காவின் சக்திவாய்ந்த வழக்கமான குண்டுகளில் ஒன்றான ‘Mother of All Bombs’ (MOAB) குண்டைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க இராணுவம் கவனம் செலுத்தி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

GBU-43/B Massive Ordnance Air Blast (MOAB) என அழைக்கப்படும் இந்தக் குண்டு, அமெரிக்காவின் கையிருப்பில் உள்ள மிகப்பெரிய அணுவாயுதமற்ற குண்டாகக் கருதப்படுகிறது.

ட்ரம்ப் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டால், எதிர்வரும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலுக்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ இந்தக் குண்டைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுக்கு எதிரான போரில் இந்தக் குண்டு முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டால், இராணுவ மோதலின் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனப் பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.

எனினும், இத்தகைய தாக்குதலால் ட்ரம்ப் அறிவித்துள்ள மூலோபாய இலக்குகளை அடைய முடியுமா அல்லது போரின் வலுச்சமநிலையை மாற்ற முடியுமா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதாக, அமெரிக்க இராணுவத் திட்டமிடல் தொடர்பான தகவல்களை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், ஆறு மாதங்களுக்கும் மேலாக ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வந்துள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை எட்டுவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படவில்லை எனக் கூறப்படுகிறது.

போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு ட்ரம்புக்கு அரசியல் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் இடைக்காலத் தேர்தலில் வாக்காளர்களின் எதிர்வினை எவ்வாறு அமையும் என்பது குறித்தும் குடியரசுக் கட்சி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular