Homeவிளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக மீண்டும் ரோகித் சர்மா நியமனம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக மீண்டும் ரோகித் சர்மா நியமனம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ரோகித் சர்மா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16 ஆம் திகதி கோவாவில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு அணிகளும் தக்கவைப்பு மற்றும் வீரர்கள் விடுவித்தலை அறிவித்தன.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்குச் செல்ல, அங்கிருந்து அர்ஷ்தீப் சிங் மும்பைக்கு மாறினார்.

இதனால், மும்பையில் யார் அடுத்த அணி தலைவர் என்ற கேள்வி எழுந்தது, இதற்கிடையே, இன்று (27) மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளோம் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ரோகித் சர்மா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கிண்ணத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular