ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்கு நீதிமன்ற உத்தரவை வாசித்து காண்பித்து, பொலிஸார் கையளித்துள்ளனர்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, பிக்குமார் சிலர் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் நேற்றிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், உயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்தது.
பொலிஸாரின் கோரிக்கைக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதற்கமைய, குறித்த உத்தரவை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குமாரிடம் பொலிஸார் வாசித்து காண்பித்து, அதனை கையளித்தனர்.
