HomeUncategorizedகொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் ஷிராந்தி ராஜபக்ஷ

கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் ஷிராந்தி ராஜபக்ஷ

காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (09) தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண் பாதிப்பு காரணமாக ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று (08) சிறைச்சாலை விசேட வைத்தியரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது வழங்கப்பட்ட மருத்துவப் பரிந்துரைக்கு அமைய, அவரை தேசிய கண் வைத்தியசாலையின் விசேட வைத்தியரிடம் அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக அவரை தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லாமல், தேசிய கண் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த 7ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular