HomeTop newsபண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி, முட்டை விலை அதிகரிக்கலாம்

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி, முட்டை விலை அதிகரிக்கலாம்

சோளத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அந்தச் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, கால்நடைகளுக்கான தீவனத்தில் சோளத்துக்குப் பதிலாக அரிசி பயன்படுத்தப்படுவதால், கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி வேகமாகக் குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சோளத் தட்டுப்பாடு காரணமாக, சிறிய அளவிலான பண்ணையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களில் சுமார் 20 சதவீதமானோர் இந்தத் தொழிலில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சோளத் தட்டுப்பாட்டுக்கு விரைவான தீர்வு காணப்படாவிட்டால், உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டு, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கான சந்தை விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்படக்கூடும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular