2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி நாடாளுமன்றில் முதலாம் வாசிப்பிற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வரவு–செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் நவம்பர் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மேலும், வரவு–செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
