HomeTop newsநாணயக் கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானம்

நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி தமது நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தினை 8.75 ஆக தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய கொள்கைச் சபை கூடிய போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தொடர்ந்தும் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில் உள்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular