HomeTop newsக்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை ‘டிரான்ஸ்வொர்க் சதுக்கம்’ (Transworks Square) நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இந்த 70 மில்லியன் ரூபாய் பணத்தை மூன்று சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular