HomeTop newsவிவசாயிகளின் நீண்டகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி

விவசாயிகளின் நீண்டகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால், 60 வயதைப் பூர்த்தி செய்துள்ள 1,70,950 விவசாயிகளுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள 3,975 தபாலகங்கள் ஊடாக மாதாந்தம் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஓய்வூதியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய, 2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல்வேறு கட்டங்களாகத் தேங்கிக் கிடந்த பெருமளவிலான விவசாய ஓய்வூதிய விண்ணப்பங்களுக்கான பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, முழுமையான மற்றும் குறைபாடுகளற்ற விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், முறையாகத் தவணைப் பணத்தைச் செலுத்தாதவர்கள் மற்றும் 25 சதவீதத்திற்கும் அதிகமான தவணைப் பணத்தைச் செலுத்தியுள்ள பங்களிப்பாளர்களுக்கான நிகரத் தவணைப் பணத்தை (Net Installments) கணக்கிடும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, 2014 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 60 வயதைப் பூர்த்தி செய்த விவசாயிகளுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த நிலுவை ஓய்வூதியக் கொடுப்பனவுகளை மீண்டும் வழங்கும் வேலைத்திட்டத்தையும் தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இதற்கான நிலுவைக் கொடுப்பனவுகள் திறைசேரியினால் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular