HomeTop newsகுடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலே இவ்வாறு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அப்பகுதிகளில் வாழும் பொதுமக்களிடமும், அப்பகுதிகள் ஊடாகச் செல்லும் வீதிகள், குறிப்பாகக் கிளை வீதிகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடமும் அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular