HomeTop newsசர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் அறிவிப்பு

சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் அறிவிப்பு

சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் , இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணயக் கடன்நிலை தரவரிசையை ‘CCC+’ இலிருந்து ‘B-‘ ஆக இன்று (22) உயர்த்தியுள்ளது.

வெளிநாட்டு நிதியளிப்பு அபாயங்களைக் குறைத்துள்ள கொள்கைகள் மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களைச் சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

கட்டமைப்புச் சீர்திருத்தங்களால் பலப்படுத்தப்பட்ட பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியமையையே இந்தத் தரவுயர்வு பிரதிபலிக்கிறது.

இது வெளிநாட்டு நிதியளிப்பு அபாயங்களைக் குறைத்துள்ளதுடன், பொருளாதார அபாயங்களை எதிர்கொள்ளும் திறனையும் வழங்குகிறது என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இலங்கையின் கடன் நிலைமையானது இன்னமும் அதிகமாக இருக்கும் கடன் மற்றும் கடன் சேவை விகிதங்களால் பிணைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டுச் செலாவணிக் கையிருப்பு மிதமான அளவிலேயே காணப்படுவதாகவும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

தனது அனைத்து எரிபொருட்களையும் இறக்குமதி செய்யும் இலங்கைக்கு, அமெரிக்க-ஈரான் மோதலால் அதிகரித்துள்ள எரிசக்தி விலைகள், மூன்று வருட உபரிக்குப் பின்னர் 2026 ஆம் ஆண்டில் நாட்டின் நடப்புக் கணக்கைப் பற்றாக்குறை நிலைக்குத் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், சீராக அதிகரித்து வரும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் இந்த அழுத்தத்தைச் சமாளிக்க உதவுகின்றன.

இந்த அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீள்தன்மையுடன் காணப்படுவதாகவும், சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஏனைய பலதரப்பு அமைப்புகளின் நிதியுதவிகள், குறுகிய கால நடப்புக் கணக்கு நெருக்கடிகளைக் குறைப்பதற்கான நிலையான வெளிவாரி ஆதரவை வழங்குவதாகவும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular