HomeTop newsஅடுத்த சிகிச்சைத் திகதியை SMS மூலம் அறிய புதிய வசதி - தேசிய கண் வைத்தியசாலை

அடுத்த சிகிச்சைத் திகதியை SMS மூலம் அறிய புதிய வசதி – தேசிய கண் வைத்தியசாலை

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் சிகிச்சை மையங்களுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு வைத்தியசாலை நிர்வாகம் முக்கிய அறிவித்தலொன்றினை வழங்கியுள்ளது.

சிகிச்சை மையங்களுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கான அடுத்த சிகிச்சை திகதியை கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி (S.M.S.) மூலம் தெரிவிக்கும் புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஜெயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முறைமை நோயாளிகளுக்கு அடுத்த சிகிச்சை திகதியை எளிதாக கண்டறிய உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, சிகிச்சை மையம் 80000 நோயாளிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்ப தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமும் சுமார் 600 நோயாளிகள் சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலைக்கு வருவதாகவும், தினமும் சுமார் 100 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், 24 மணி நேரமும் செயல்படும் கண் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை சேவையும் செயல்பாட்டில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும் நாளன்று நடைமுறைகள் முடிந்த பிறகு, வைத்தியசாலை பதிவேட்டை அறை எண் 10 ல் ஒப்படைக்க வேண்டும் என்றும், பின்னர் அதே நாளில் அடுத்த சிக்கிச்சை திகதியை குறிப்பிடும் குறுஞ்செய்தி நோயாளிகளின் கைபேசிகளுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular