பத்தினி தேவாலயத்தின் தீர்த்த உற்சவ வருடாந்த பெரஹெராவை முன்னிட்டு, கடுவெல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (16) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பத்தினி தேவாலயத்தின் வருடாந்த பெரஹெரா இன்று காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது.
பெரஹெரா தேவாலயத்திற்கு அருகில் ஆரம்பமாகி, 143 அவிசாவளை – கொழும்பு பேருந்து வீதி ஊடாக கடுவெல ராஜசிங்க பாலத்தைக் கடந்து, பண்டாரவத்தை மற்றும் பியகம பகுதிகளை சென்றடையவுள்ளது.
தீர்த்த உற்சவ சடங்குகள் நிறைவடைந்த பின்னர், அதே வீதி வழியாக பெரஹெரா மீண்டும் கடுவெல சந்தியை கடந்து தேவாலயத்தை வந்தடையவுள்ளது.
இதன் காரணமாக பெரஹெரா நடைபெறும் காலப்பகுதியில் குறித்த வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
எனவே, சாரதிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
