2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கான செலவினம் 58.8 சதவீதம் அதிகரித்து 3,168.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக 1,995.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டிருந்தது.
இதனுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எரிபொருள் இறக்குமதி செலவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
இக்காலப்பகுதியில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு 7.5 சதவீதம் அதிகரித்து 479.5 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்கான செலவு 78.7 சதவீதம் அதிகரித்து 2,538.6 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
மேலும், நிலக்கரி இறக்குமதிக்கான செலவும் 16.1 சதவீதம் அதிகரித்து 150.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
