HomeTop newsஇன்றைய வானிலை

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியமுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 – 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பிராந்தியங்களில் அவ்விடம் விட்டு அவ்விடம் மழை பெய்யக்கூடும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 – 60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான மற்றும் புத்தளத்திலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்.

முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான மற்றும் புத்தளத்திலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீட்டர் வரை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular