வெறும் தோற்றம் மற்றும் கவர்ச்சியை மட்டுமல்லாது, தனது அறிவுப்பூர்வமான மற்றும் சிந்தனைமிக்க பக்கத்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் புதிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அவதாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
திரைப்படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ், தற்போது தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரசிகர்களுடன் புதிய தளத்தின் ஊடாக தொடர்புகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் தளம் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். இந்த தளம் ஜாக்குலினின் ஆழமான சிந்தனைகள் மற்றும் தனித்துவமான ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏஐ தளத்தின் மூலம் ரசிகர்கள்,
- சிறந்த புத்தகப் பரிந்துரைகளைப் பெற முடியும்.
- வாழ்க்கை தொடர்பான ஆழமான சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை அறிந்துகொள்ள முடியும்.
- ஜாக்குலினின் வாழ்க்கையில் இடம்பெற்ற சுவாரஸ்யமான அனுபவங்களைக் கேட்க முடியும்.
இந்த டிஜிட்டல் தளத்தில் மேம்பட்ட குரல் தொழில்நுட்பம் மற்றும் ஏஐ அடிப்படையிலான உரையாடல் வசதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2014ஆம் ஆண்டு வெளியான ‘கிக்’ திரைப்படத்தின் மூலம் பொலிவுட்டில் முக்கிய இடத்தைப் பெற்ற ஜாக்குலின் பெர்னாண்டஸ், இந்த புதிய தொழில்நுட்ப முயற்சியின் மூலம் உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாக இணைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
