Homeவிளையாட்டுஆப்கானிஸ்தானை 103 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை

ஆப்கானிஸ்தானை 103 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை

இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு A ஒருநாள் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 6 ஆவது லீக் போட்டியில் இலங்கை அணி 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

தம்புள்ளையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 322 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக Avishka Fernando 110 ஓட்டங்களையும், Niroshan Dickwella 66 ஓட்டங்களையும் பெற்றனார்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Faridoon Dawoodzai 4 விக்கெட்டுகளையும், Farmanullah 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 323 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 219 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்நிலையில் இலங்கை அணி 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக Farmanullah 43 ஓட்டங்களையும் பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Dulaj Samuditha 5 விக்கெட்டுகளையும், Kugathas Mathulan 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular