முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (31) மோதி வருகின்றன.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு லாகூரில் ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ (38) மற்றும் கமிந்து மெண்டிஸ் சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.
87 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டாக அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழந்து வௌியேறினார்.
அதன்பின்னர் களம்புகுந்த அணித் தலைவர் குசல் மெண்டிஸூம் 8 ஓட்டங்களுடன் விரைவில் ஆட்டமிழந்து வௌியேறினார்.
எவ்வாறாயினும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கமிந்து மெண்டிஸ் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கன்னிச் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவர் தற்சமயம் வரையில் 103 ஓட்டங்களுடன் (9 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) துடுப்பாடி வருகின்றார்.
அவருக்குப் பக்கபலமாக பவன் ரத்நாயக்க (33*) களத்தில் உள்ளார்.
