Homeஉலகம்காங்கோவில் எபோலா தொற்று தீவிரம்

காங்கோவில் எபோலா தொற்று தீவிரம்

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 10,000 இற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொற்றுக்கு உள்ளானவர்களில் 2,000 இற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கோவின் 26 மாகாணங்களில் 8 மாகாணங்களில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிகிச்சை மையங்களுக்கு வெளியேயும் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த மே மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பமான இந்தத் தொற்று, கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவி வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து, உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதேவேளை, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் காங்கோவுக்கான பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தொற்றுக்குக் காரணமான வைரஸ் பண்டிபக்யோ (Bundibugyo) வகையைச் சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular