Homeஉள்நாடுவளிமண்டலத்தில் தளம்பல் நிலை - அடுத்த சில நாட்களுக்கு அடைமழை நீடிக்கும்

வளிமண்டலத்தில் தளம்பல் நிலை – அடுத்த சில நாட்களுக்கு அடைமழை நீடிக்கும்

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின் படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மேல், தென் மற்றும் வட மாகாணங்களில் காலை வேளைகளிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களிலிருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular