Homeவிளையாட்டுபேட் கம்மின்ஸைத் தக்கவைக்க ரூ. 37 கோடி வருடாந்த சம்பளம்

பேட் கம்மின்ஸைத் தக்கவைக்க ரூ. 37 கோடி வருடாந்த சம்பளம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை விட ஐ.பி.எல். போன்று பல்வேறு நாடு களில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாடினால் பலமடங்கு அதிக பணம் கிடைக்கும் என்ற நிலை உருவாகி வருகிறது. இதனால் பல நட்சத்திர வீரர்கள் தங்கள் நாட்டுக்காக விளையாடுவதை விடுத்து ஐ.பி.எல். போன்ற தொடர்களுக்கு முன்னுரிமை அளிக்க தொடங்கி உள்ளனர்.

இதனால் தங்கள் நாட்டு முன்னணி வீரர்களை தக்கவைத்துக் கொள்ள கிரிக்கெட் வாரியங்கள் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அவுஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் தலைவராக 32 வயது பேட் கம்மின்ஸ் தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாட வைக்கும் வகையில் அவருக்கு ஆண்டுக்கு 37 கோடி ரூபா வீதம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம் செய்ய அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது.

அதாவது 2029 ஆம் ஆண்டு வரை அவர் 3 அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் அளிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை அவர் ஏற்கும்பட் சத்தில் 100 கோடி ரூபாவுக்கு மேல் கிடைக்கும். ஆனால் ஐ.பி.எல். போன்ற டி20 லீக் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழக்க வேண்டியது வரலாம்.

இதே போல் டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோருக்கும் இத்தகைய ஒப்பந்தத்தை அளிக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular