HomeTop newsமின் கட்டண அதிகரிப்பு -180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 18% உயர்வு

மின் கட்டண அதிகரிப்பு -180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 18% உயர்வு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டண திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, மாதாந்திரம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தில் 18 சதவீதம் அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், 180 அலகுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு எந்தவித கட்டண மாற்றமும் செய்யப்படமாட்டாது என ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

மின் உற்பத்தி செலவுகள் உயர்ந்துள்ளதுடன், இந்த மற்றும் அடுத்த காலாண்டுகளில் சுமார் 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே கட்டண உயர்வுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் நிவாரணம் வழங்க எழுத்துப்பூர்வமாக இணங்கியுள்ளதால், இந்த திருத்தம் மொத்த நுகர்வோரில் சுமார் 5 சதவீதத்தினரையே நேரடியாக பாதிக்கும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் 95 சதவீத மின்சார நுகர்வோருக்கு இந்த கட்டண மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தாது என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular