Homeசெய்தியாழிலிருந்து யாத்திரைவந்த சிவபக்தர்களுக்கு மலையகத்தில் வரவேற்பு!

யாழிலிருந்து யாத்திரைவந்த சிவபக்தர்களுக்கு மலையகத்தில் வரவேற்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து சிவனொளி பாதமலைக்கான புனித திருத்தல யாத்திரை மேற்கொண்டுள்ள யாத்திரிகள், இன்று கொட்டகலை பகுதியை வந்தடைந்தனர்.

கொட்டகலை ரொக்கிலிலுள்ள சிவஆலயத்தில் , மலையக இந்து குருமார் ஒன்றியத்தால் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு சிவ பஜனையும் இடம்பெற்றது.

அங்கிருந்து சிவனொளிபாதமலையை நோக்கி யாத்திரை ஆரம்பமானது. நல்லத்தண்ணி நகரில் இருந்து சிவனொளிபாத மலையை சென்றடையவுள்ளனர்.

செ.தி. பெருமாள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular