Homeசெய்திலிந்துலையில் கோர விபத்து: இருவர் படுகாயம்!

லிந்துலையில் கோர விபத்து: இருவர் படுகாயம்!

டி.சந்ரு

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, லெமனியர் தோட்டத்தில் கனரக லொறியொன்று சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

வெல்லவாய பகுதியில் இருந்து ஹட்டனிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு விறகு ஏற்றிவந்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறி இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளது.

படுகாயமடைந்த சாரதியும், உதவியாளரும் லிந்துலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular