HomeTop newsசுகாதார அமைச்சில் அலுவலக நுழைவுக்கு QR குறியீட்டு முறைமை அறிமுகம்

சுகாதார அமைச்சில் அலுவலக நுழைவுக்கு QR குறியீட்டு முறைமை அறிமுகம்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சக அலுவலகத்திற்குள் நுழைவதற்கு QR குறியீட்டு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, அலுவலகத்திற்கு வருபவர்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து தங்கள் தகவல்களை உள்ளிட வேண்டும் என்று அறிவிப்பு பலகையொன்றும் அமைச்சக அலுவலகத்தில் முன்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பலகையில், ‘மாண்புமிகு அமைச்சரை சந்திப்பதற்கு முன்பும், அமைச்சக அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பும், மேலே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து உங்கள் தகவல்களை உள்ளிடவும்’ என்று எழுதப்பட்டுள்ளது.

QR குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி, வருகை நேரம், பெயர், மாவட்டம், பதவி, தொலைபேசி எண், விவகாரம், சந்திக்க வேண்டிய அதிகாரி மற்றும் புறப்படும் நேரம் ஆகிய தகவல்களை ஒரு தாளில் உள்ளிட வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular