Homeஉலகம்தோல்வியை சந்தித்து வருகிறது ஈரான்: அமைதி பேச்சு ஆரம்பமான கையோடு ட்ரம்ப் வீசிய அறிக்கை குண்டு!

தோல்வியை சந்தித்து வருகிறது ஈரான்: அமைதி பேச்சு ஆரம்பமான கையோடு ட்ரம்ப் வீசிய அறிக்கை குண்டு!

ஈரானின் ராணுவ பலம் முற்றிலுமாக சிதைந்துவிட்டதாகவும், அந்நாடு போரில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் போன்றவை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் நிலையை ஊடகங்கள் தவறாகச் சித்தரிப்பதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அந்நாட்டுத் தலைவர்கள் பலர் தற்போது உயிரோடு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சு ஆரம்பமாகியுள்ள நிலையில், ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular