க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு டிசம்பர் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத் தடை பரீட்சை நிறைவடையும் வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 3,519 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படவுள்ளது.
