HomeTop newsகுற்றங்களை ஒடுக்குவதுடன் மக்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி

குற்றங்களை ஒடுக்குவதுடன் மக்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

குற்றங்களை ஒடுக்குவதன் மூலம் மாத்திரம் சிறந்த நாட்டை உருவாக்க முடியாது என்றும், மக்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (28) களனி நாகானந்த சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தர்மவழியில் செயற்படும் ஆட்சியாளர்களால் நாடு செழிப்பை நோக்கிப் பயணிக்கும் என்றும், ஊழல் மற்றும் அதர்மம் நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டுசெல்லும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

1966 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் பிரதான நோக்கம் உலக அமைதியை ஏற்படுத்துவதாகும். இந்நிகழ்வில் 50 நாடுகளைச் சேர்ந்த பௌத்த தலைமைத் தேரர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular